வாணர் குல அரசர்கள்.
தென்னிந்திய வரலாற்றில் பல்லவர், சோழர், சேர, பாண்டியர் வரிசையில் போர்க்குடியாகவும்,புகழ் பெற்ற மன்னர்களாகவும் ஆட்சி செய்த குடிகளில் மிகவும் முக்கியமான குடிகள் வாணர் எனவும் அழைக்கப்படும் மகாபலியின் வம்ச குடியினரே ஆவார்கள். வாணர் என்றால் மலையர் என்ற மலையாளும் மன்னர் குடியாக கொள்ளப்படுகின்றது..
சேரனை சங்க இலக்கியத்தில் மலையன் என்றும் வானவன்(மலையர்) என்றும்.வானவரம்பன்(சேரன்) மலைகளை எல்லையாக கொண்டவன் என்று கூறுகின்றது.ஆக தென்னாடு முழுவதும் விந்திய மலை முதல் தென் மலையான பொதிகை,மேற்கு தொடர்ச்சி மலை பகுதி வரை மகாபலி வம்சத்தவர்களான வாணர்(மலையர்) என்ற மன்னர்களே ஆண்டுள்ளனர். இதற்கு ஆதாரமாக.
"தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி பெறினும் பழிநமக் கெழு வெண்ணாய் விழுநிதி" (அடி 202 - 204 மதுரைகாஞ்சி) - எனக் குறிப்பிடுகிறது. இவ்வரிகளில் குறிக்கும் தென்புலம் என்பது இந்தியத் திருநாட்டிற்கு தென்புறம் தடுப்புச்சுவர் போல் உள்ள விந்திய மலையாகும். இது தக்காணம், தஷ¤ணபாதம், தக்கண பாதம் எனவும் வட மொழியில் அழைக்கப்படுகின்றன.இதில் இருந்து விந்திய மலையிலிருந்து குமரிவரை தமிழ் மன்னாக இருந்திருக்க வேண்டும்.இந்த தினைகளில் முதல் தினையான குறிஞ்சி(மலை) தினை ஆளும் சக்கரவர்த்தியாக மஹாபலியே திகழ்ந்திருக்கவேண்டும்.
அருள்மிகு வேங்கட வாணன்( மலையன்) திருக்கோயில்
மூலவர்வேங்கட வாணன்( மலையன்) , ஸ்ரீநிவாசன்உற்சவர்மாயக் கூத்தர்அம்மன்/தாயார்அலமேலு மங்கைத் தாயார்,கமலாவதி, குழந்தைவல்லித் தாயார்.தல விருட்சம்-தீர்த்தம்பெருங்குளத்தீர்த்தம்ஆகமம்/பூஜை-பழமை1000-2000 வருடங்களுக்கு முன்புராண பெயர்திருக்குளந்தைஊர்பெருங்குளம்மாவட்டம்தூத்துக்குடிமாநிலம்தமிழ்நாடு
பாடியவர்கள்:மங்களாசாசனம்
நம்மாழ்வார்
கூடச் சென்றேன் இனியென் கொடுக்கேன் கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம் பாடற்றொழிய இழிந்து வைகல் பல்வளையார் முன் பரிசழிந்தேன் மாடக்கொடி மதிள் தென்குளந்தை வண்குட பால் நின்ற மாயக் கூத்தன் ஆடற் பறவை யுயர்த்த வல்போர் ஆழி வளவனை யாதரித்தே.
சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும்
எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய்
வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்பு லீகடி தோடிவா.
-ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்
திருவிளையாடற் புராணம் பாண்டியர் மரபின் வரிசைப் பட்டியலும், பல சோழ மன்னர் பெயர்களும் தருகின்றது. ஆனால் இவை நமக்குத் தெரிந்த வரலாற்றுச் செய்திகளுக்கு முரண்படுகின்றன. இலக்கியத்தால் அறியப்படும் செய்திகளுக்கும் மாறுபடுகின்றன. இந்நிலையில் அப்புராணம் நமக்குச் சிறிதும் பயன்படவில்லை.
சேர, சோழ பாண்டியர் முத்தமிழரசர். அவர்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் தமிழகத்தில் ஆண்டனர். இதை நாம்
முதலில் ஒரே அரச மரபாயிருந்தது என்று மலையாள நாட்டு மக்கள்
மரபும் இலக்கிய மரபும் குறிக்கின்றன. அதன்படி 'மாவலி' என்ற அரசன் தென்னாடு முழுவதையும் ஆண்டான்.
அவன் சேரன் அல்லது பாண்டிய மரபைச் சார்ந்தவனாகவே இருக்கவேண்டும். அக்காலத்தில்
தென்னாட்டில் ஒரே மொழி, பழந்தமிழ்தான் வழங்கிற்று. சாதி வேறுபாடு, உயர்வு தாழ்வுகள் இல்லை.
No comments:
Post a Comment